பிக்ஹாட், இந்தியாவின் மிகப்பெரிய உழவர்-மைய டிஜிட்டல் தளம். பல வருட விவசாய அனுபவத்துடன் தரவு, அறிவியல், தொழில்நுட்பம் கொண்டு, பயிர்கள் பற்றிய துல்லியமான அறிவு, சரியான நேரத்தில் மேலாண்மை மற்றும் ஆலோசனை பெற விவசாயிகளுக்கு உதவுகிறது.
விவசாயப் பெருமக்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றி, அவர்களின் உழைப்பை லாபகரமானதாக மாற்றும் அரியதோர் பயணத்தில், பிக்ஹாட் துணை நிற்கிறது. வேளாண் துறையின் ஒவ்வொரு படியிலும் விவசாயிகளுக்கு வழிகாட்டி, ஆதரவு வழங்கும் ஒரு முழுமையான தளமாக இது திகழ்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் பரந்துபட்ட நிபுணத்துவத்துடன், பிக்ஹாட், சாகுபடி முதல் சந்தைப்படுத்துதல் வரை அனைத்து தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வுகளை வழங்குகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இதன் சேவைகள் கிடைப்பதால், மொழி ஒரு தடையாக இராது.
பயிர்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வுகள் தேவைப்படும்போது, பிக்ஹாட்டின் தனிச்சிறப்புமிக்க 'க்ராப் டாக்டர்' அம்சம் ஒரு வரப்பிரசாதம். ஒரு புகைப்படம் எடுத்த மாத்திரத்தில், பயிரைத் தாக்கும் நோய் அல்லது பூச்சிகளை துல்லியமாக கண்டறிந்து, அதற்கான அறிவியல் பூர்வமான தீர்வுகளை நொடிப்பொழுதில் பெறலாம். மேலும், பிக்ஹாட் 'கிசான் வேதிகா' மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய விவசாயச் சமூகத்துடன் இணைந்து அறிவைப் பரிமாறிக் கொள்ளலாம். சக விவசாயிகளுடனும், வேளாண் வல்லுநர்களுடனும் கலந்துரையாடி, உங்கள் பயிர் தொடர்பான கேள்விகளுக்கு உங்கள் தாய்மொழியிலேயே உடனடித் தீர்வுகளைப் பெற்று, சாகுபடி முறைகளை மேம்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பகுதிக்குரிய வானிலை முன்னறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து, உங்கள் விவசாயச் செயல்பாடுகளை திறம்பட திட்டமிடவும் பிக்ஹாட் உதவுகிறது.
உயர்தரமான மற்றும் நூறு சதவீதம் அசல் வேளாண் பொருட்களுக்கான தேடலை பிக்ஹாட் அக்ரி ஸ்டோர் முடிவுக்குக் கொண்டுவருகிறது. பயிர் பாதுகாப்பு மருந்துகள், விதைகள், உரங்கள், பண்ணை உபகரணங்கள், சிறப்பு ஊட்டச்சத்துக்கள், கால்நடைப் பராமரிப்பு பொருட்கள் என 9000-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களை இங்கு காணலாம். சின்ஜென்டா, பேயர், தனுகா போன்ற 400-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளை உங்கள் வீட்டு வாசலிலேயே பெறும் வசதியுடன், பிக்ஹாட் உங்கள் நம்பிக்கைக்குரிய சில்லறை வர்த்தகராக திகழ்கிறது. முதல் ஆர்டருக்கு சிறப்புத் தள்ளுபடியுடன், எளிதான திருப்பி அனுப்புதல் மற்றும் பொருள் மாற்றுக்கொள்கை, பாதுகாப்பான பலவகை கட்டண முறைகள், 24/7 வாடிக்கையாளர் சேவை என நம்பகமான மற்றும் வசதியான ஷாப்பிங் அனுபவத்தை பிக்ஹாட் உறுதி செய்கிறது. மேலும், வாய்ஸ் சர்ச் வசதி மூலம் நீங்கள் விரும்பும் பொருட்களை எளிதாகத் தேடலாம்.